குரங்கு அம்மை நோயாளர்களை அடையாளம் காண இலங்கையில் பரிசோதனை ஆரம்பம்
குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பரிசோதனைகள் நேற்று (8) ஆரம்பமாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இந்த பரிசோதனைகளுக்கான உபகரணங்கள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு நோயாளி மீது சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவர் நோயாளியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிஇ இந்தத் திட்டத்தின் கீழ் நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துவார்.
அது இல்லாமல், இந்த சோதனை கருவி கருவிகள் நோய் பற்றிய பரிசோதனைகளை நடத்துவதில்லை என அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இலங்கையில் இதுவரை குரங்கு அம்மை தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்படவில்லை. அண்டை நாடான இந்தியாவிலிருந்து ஒரு சில நோயாளிகள் சமீபத்திய நாட்களில் இனம்காணப்பட்டுள்ளனர்.