ஒன்றரை கோடி பெறுமதியான கணனிகள் மற்றும் விஞ்ஞான உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கொழும்பில் கைது
நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள காட்சியறை ஒன்றில் இருந்து சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணினிகளை திருடிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
விகார மகாதேவி பூங்காவில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நின்றிருந்த போதே அது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின்படி, குருந்துவத்தை ரேஸ்கோர்ஸில் மூடப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியின் கூரையில் திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் இரண்டாம் நாள் குறித்த காட்சியறையின் முன்பக்க கண்ணாடியை உடைத்து பொருட்களை திருடி குப்பை வண்டியில் ஏற்றி ரேஸ்கோர்ஸில் மூடியிருந்த இரண்டு மாடி கட்டிடத்திற்கு கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 18 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 37 வயதுடைய போதைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.