இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சுற்றுலாதுறை முக்கியமானது - ஜூலி சங்
Kanimoli
2 years ago
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சுற்றுலாதுறை முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே அமெரிக்க தூதுவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் உடனடி மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் குறித்த டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் இயற்கை அழகையும் கண்கவர் கலாச்சாரத்தையும் அதிகமான அமெரிக்கர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தான் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.