விரும்பும் இடத்தில் பணிபுரியலாம்,பல்வேறு சலுகைகள்-ஊழியர்களை மகிழ்விக்கும் CEO

Prasu
2 years ago
விரும்பும் இடத்தில் பணிபுரியலாம்,பல்வேறு சலுகைகள்-ஊழியர்களை மகிழ்விக்கும் CEO

அமெரிக்காவில் கடந்த 2004 ஆம் வருடம் தொடங்கப்பட்ட நிறுவனம் கிராவிட்டி பேமெண்ட். இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி டான் பிரின்ஸ். 

இந்த நிறுவனம் கிரெடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தில் தற்போது 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில் டான் பிரின்ஸ் தற்போது வெளியிட்டு இருக்கிற  ஒரு ட்விட்டர் பதிவில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக உயர்த்திருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 63 லட்சம் ஆகும். இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை மற்றும் பல சலுகைகளை வழங்குகின்றது. 

பணியாளர்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் இருந்து வேலை அனுமதிப்பதும் மேலும் வீட்டிலிருந்து பணிபுரிவது, ஊழியர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பணிபுரிவது போன்ற சலுகைகளை டான் பிரின்ஸ் தனது ஊழியர்களுக்கு வழங்கி இருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!