தயார் நிலையில் இருங்கள் - அதிபர் ரணில் விக்ரமசிங்க

Kanimoli
3 years ago
தயார் நிலையில் இருங்கள் - அதிபர் ரணில் விக்ரமசிங்க

மத்திய மாகாண ஆளுநர் பதவியை ஏற்க முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை தயார் நிலையில் இருக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பதவியை ஏற்பதற்குத் தயார் நிலையில் இருக்குமாறும், தற்காலிகமாகவேனும் இப்பதவியை ஏற்று நாட்டுக்கு சேவையாற்றுமாறும் நவீன் திஸாநாயக்கவிடம் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணசபை ஆளுநராக லக்‌ஸ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார்.

இவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 
மாகாண சபைகளின் செலவினங்கள் முகாமைத்துவம் தொடர்பில் ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மாகாண சபைகள் செயற்படாத நிலையில், அவற்றின் செலவினங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பான சிக்கல் எழுந்துள்ளது.

இதனையடுத்து மாகாண சபைகளின் நிர்வாகம் மட்டுமன்றி செலவினங்கள் தொடர்பான அதிகாரமும் ஜனாதிபதியின் மூலம் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4