சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும்.. அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி கடும்மையான பதில்...

Prathees
2 years ago
சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும்.. அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி கடும்மையான பதில்...

யுவான் வான் 5 என்ற சீனக் கப்பலானது இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது இந்தியாவிற்கு என்ன அச்சுறுத்தல் உள்ளது என்பதை எழுத்து மூலம் தெரிவிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அந்த கோரிக்கைக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை என்று உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதிப்பது தொடர்பாக அண்மையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபையிலும் ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இந்தக் கப்பல் ஆகஸ்ட் 16ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்து அங்கு நங்கூரமிட உள்ளது.

இது ஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி குறைந்த வேகத்தில் பயணித்து வருகிறது.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் உள்வரும் கப்பலை உள்ளே அனுமதிப்பது தொடர்பில் ஜனாதிபதியிடம் கவலை தெரிவித்த போதிலும், சீனக் கப்பலின் வருகையை எதிர்ப்பதற்கு உறுதியான காரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இதே செய்தியை இந்திய இராஜதந்திரிகளுக்கும் வெளியுறவு அமைச்சர் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

இவ்விரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களை சமர்ப்பிக்காததால், சீனக் கப்பலை இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளது.

இதேவேளை, இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!