தாய்லாந்து அரசாங்கத்திடம் மத ஸ்தலங்களுக்கு செல்ல அனுமதி கோரிய கோட்டாபய...
Prathees
2 years ago
தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் மத ஸ்தலங்களுக்கு வழிபாடு நடத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளார்.
தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள அவர், விடுதியை விட்டு வெளியே வரவேண்டாம் என காவல்துறை கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய அவர், மாலைதீவுக்குச் சென்று சிங்கப்பூருக்குச் சென்று, தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.
அவர் தாய்லாந்தில் கிட்டத்தட்ட 3 மாதங்கள் தங்க அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அந்நாட்டில் இருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும், அந்நாட்டுக்குச் சிக்கலாக உள்ள இத்தகைய நடத்தையை தவிர்க்குமாறும் அந்நாட்டு அரசு அவருக்கு நிபந்தனை விதித்துள்ளது.