இந்தியா டோர்னியர் 228 போர் விமானத்தை இலங்கைக்கு வழங்க தீர்மானம்
இந்தியா அடுத்த சில நாட்களில் டோர்னியர் 228 போர் விமானத்தை இலங்கைக்கு வழங்கலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திரதின கொண்டாட்டத்தின்போது 15ம் திகதி இந்த விமானம் வழங்கப்படலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த வகை விமானங்களை இந்திய கடற்படை தற்போது கண்காணிப்பு நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தி வருகின்றது.
இலங்கைக்கான இந்தியாவின் கடனுதவி திட்டத்தின்கீழ் இந்த விமானங்களை புதுடில்லி வழங்கவுள்ளது.
டோர்னியர் விமானங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் சிலகாலமாக இடம்பெறுகின்றன,இந்த விமானத்தை கடற்படை இலத்திரனியல் யுத்தபோர்முறைக்காக கடல்சார் கண்காணிப்பிற்காக அனர்த்த நிவாரண நடவடிக்கைகளிற்காக பயன்படுத்திவருகின்றது என தெரிவித்துள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானங்களை கடல்சார் கண்காணிப்பிற்கும் பயன்படுத்த முடியும் என தெரிவித்தன எனவும் குறிப்பிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரட்டை இயந்திர டோனியர் விமானங்களை இந்திய கடற்படையும் எல்லை காவல்படையினரும் இந்திய விமானப்படையினரும் பயன்படுத்திவருகின்றனர்.