கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை

#Mahinda Rajapaksa #Gotabaya Rajapaksa
Prasu
2 years ago
கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூலை 9ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிநாட்டில் இருந்துள்ளார். 

ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்ததும் வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி, தற்போது மாலைதீவு, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து தாய்லாந்துக்கு வந்துள்ளார்.

எவ்வாறாயினும் வேறு நாடுகளில் வாழாமல் தாய் நாட்டிற்கு திரும்புமாறு மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிக்கு இலங்கையில் வாழ்வதற்கு எந்தவித பாதுகாப்பின்மையும் இல்லை என பாதுகாப்பு தரப்பினர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோட்டே கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரைப் பார்க்கச் சென்ற போது, ​​பேராசிரியர் கொட்டப்பிட்டிய ராகுல தேரர், முன்னாள் ஜனாதிபதி குறித்தும் கேட்டுள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபய இலங்கைக்கு வந்து சுதந்திரமாக இருப்பதை சாத்தியமாக்குங்கள்” என்று கோரிக்கை விடுத்த  போது ஜனாதிபதி எதுவும் கூறவில்லை.