மைத்திரிபால கூறுவது பொய்.. கட்சி எடுக்கும் தீர்மானங்களில் எனக்கு உடன்பாடு இல்லை..- சாமர சம்பத்
Prathees
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அடிபணியப்போவதில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்தியக் குழுவில் உள்ளவர்களை விட, நாடாளுமன்றத்தில் தனக்கு அரசியல் தெரியும் என்றும், அவர்களால் தனக்காக எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, கட்சியின் சில அரசியல் விடயங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.