டிரம்பின் சொகுசு பங்களாவில் ரகசிய ஆவணங்கள் சிக்கியது- FBI அதிகாரிகள் அறிக்கை

#America
Prasu
3 years ago
டிரம்பின் சொகுசு பங்களாவில் ரகசிய ஆவணங்கள் சிக்கியது- FBI அதிகாரிகள் அறிக்கை

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். அவருக்கு சொந்தமாக மார்-ஏ-லகோ என்ற எஸ்டேட் புளோரிடா மாகாணத்தில் உள்ளது. 

இந்த எஸ்டேட்டில் கடந்த 8-ந் தேதி எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

கடந்த அதிபர் தேர்தலில் தோற்ற டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது ரகசிய ஆவணங்களை பெட்டியில் வைத்து எடுத்து சென்றதாகவும், அந்த ஆணங்களை இந்த எஸ்டேட்டில் வைத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

ரகசிய ஆவணங்களை கண்டுபிடிப்பதற்காக டிரம்பின் எஸ்டேட்டில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். 

அதே வேளையில் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் டிரம்ப்பின் எஸ்டேட்டில் இருந்து ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சோதனைக்கான வாரண்ட், பறிமுதல் செய்யப்பட்டதை குறித்து விவரங்களை எப்.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4