பேசிக்கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த அரேபிய தூதர் முகமது ஃபஹத் அல்-கஹ்தானி(வீடியோ)

Prasu
2 years ago
பேசிக்கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த அரேபிய தூதர் முகமது ஃபஹத் அல்-கஹ்தானி(வீடியோ)

எகிப்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி திங்கட்கிழமை அன்று   நடைபெற்ற அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் சாதனையை ஆதரித்து உரையாற்றிக் கொண்டு இருந்த போது திடிரென சரிந்து விழுந்து முகமது ஃபஹத் அல்-கஹ்தானி உயிரிழந்துள்ளார்.

இந்த உரையில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியை மனிதகுலத்தின் டீன் மற்றும் அமைதியான மனிதர் என அல்-கஹ்தானி விவரித்து கொண்டுு இருந்தார். அல்-கஹ்தானி தனது மனைவி ஆயிஷா அல்-ஜாப்ரியுடன் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மேடையில் உரையாற்றிக் கொண்டு இருந்த அல்-கஹ்தானி சரிந்து விழுந்து உயிரிழந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.