10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிமங்கள் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிப்பு

Prasu
2 years ago
10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிமங்கள் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிப்பு

சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த டைனோசரின் புதை படிமங்களை ஆய்வாளர்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அர்ஜெண்டினாவில் ரியோ நீக்ரோ என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த 2 கால்கள் கொண்ட டைனோசர்களின் புதை படிமங்களை அந்நாட்டின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் மூலம் டைனோசர்கள் இப்பகுதிகளில் உலா வந்தது உறுதியாகியுள்ளது. மேலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைனோசருக்கு “ஜகாபில் கனிகுரா” என்று ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.