பிரபல ஹாலிவுட் நடிகை உயிர்பிழைப்பது கடினம் - மருத்துவர்கள் தகவல்

#America #Accident
Prasu
2 years ago
பிரபல ஹாலிவுட் நடிகை உயிர்பிழைப்பது கடினம் - மருத்துவர்கள் தகவல்

அமெரிக்கா நாட்டை சேர்ந்த பிரபல நடிகை கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த மினி கூப்பர் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

இந்த கோர விபத்து கடந்த வாரம் நடந்தது. பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச். இவருக்கு 53 வயதாகிறது. இவர் வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ், சைக்கோ, கேட் பைட், தி லாஸ்ட் வேர்ல்ட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். “அனதர் வேர்ல்ட்” என்ற அமெரிக்க டிவி தொடரில் இரண்டு கேரக்டர்களில் நடித்து பிரபலமானர். 

இவர் தனது மினி கூப்பர் காரில், லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகர் பகுதியில்  கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.  அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகிய கார், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது.  

மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கிய பின் வீட்டின் முன்பகுதியும் சேர்த்து தீப்பிடித்து எரிந்து சேதமானது.

இது  பற்றி தகவலறிந்து  வந்த 60க்கும் மேற்பட்டத் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் நடிகை அன்னே ஹெச் படுகாயமடைந்துள்ளார்.

அவருடைய முதுகு பகுதியில் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் அவருக்கு மூளையில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்து அதிவேகம் காரணமாக ஏற்பட்டதாகவும் அவர் மது அருந்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. 

இருப்பினும் காவல்துறையினர் இதை உறுதிப்படுத்தவில்லை. வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிரபல நடிகை கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் பிழைப்பது கடினம் என்ற தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.