இலங்கையால் தேடப்பட்டுவரும் பாதாள உலக கும்பலின் தலைவன் 'ஹரக் கட்டா' டுபாயில் கைது

#SriLanka #Arrest
Prasu
3 years ago
இலங்கையால் தேடப்பட்டுவரும் பாதாள உலக கும்பலின் தலைவன் 'ஹரக் கட்டா' டுபாயில் கைது

இலங்கையால் தேடப்பட்டுவரும் பாதாள உலகக் குற்றவாளிக் கும்பலின் தலைவன் 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நடுன் சிந்தக துபாயில் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

டுபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் போது கடந்த 11ஆம் திகதி டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் நாட்டை விட்டு துபாய்க்கு தப்பிச் சென்ற போது பயன்படுத்திய போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரக் கட்டாவின் முகத்துடன் இறந்த நபரின் தகவலைப் பயன்படுத்தி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் ஹரக் கட்டாவின் இயக்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4