இன்றைய வேத வசனம் 15.08.2022: மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய்
மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி - எபேசியர் 4:2
திருமணமாகி, 22 ஆண்டுகள் வாழ்ந்த பிறகும், மெரினோடு என்னுடைய வாழ்க்கை கடந்துபோன விதத்தைக் குறித்து நான் ஆச்சரியப்படுவதுண்டு. நான் ஒரு எழுத்தாளன். மெரின் ஒரு புள்ளியல் நிபுணர். நான் வார்த்தைகளோடு வேலை செய்கிறேன். அவளோ எண்களோடு வேலை செய்கிறாள்.
நான் அழகை எதிர்பார்க்கிறேன். அவளோ, செயல்பாட்டை எதிர்நோக்குகிறாள். நாங்கள் வெவ்வேறு சிந்தனை உலகத்தை சார்ந்தவர்கள். மெரின் சரியான நேரத்தை பின்பற்றுவாள். நானோ சற்று தாமதமாகவே செயல்படுபவன்.
ஓட்டலுக்கு சென்றால், நான் புதிய வகை உணவை சாப்பிட நினைப்பேன்; அவளோ, வழக்கமாய் சாப்பிடும் உணவையே தெரிந்தெடுப்பாள். ஆர்ட் கேலரியில் இருபது நிமிடங்களுக்கு பிறகு தான் நான் தேர்ந்தெடுக்கவே ஆரம்பிப்பேன்.
மெரினோ, கீழே உள்ள உணவகத்தில் அமர்ந்துகொண்டு நான் இன்னும் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வேன் என்று சலித்துக்கொள்வாள். நாங்கள் இருவரும் பொறுமையை கற்றுக்கொள்வதற்கான நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வோம்.
நாங்கள் சேர்ந்து சிரிப்போம், பிரயாணம் செய்வோம், சேர்ந்து ஜெபிப்போம். நான் அவளுடைய முன்னேற்றத்திற்கு காரணமானேன்.
அவள் என்னுடைய முன்னேற்றத்திற்கு காரணமாவாள். நாங்கள் இருவரும் சேர்ந்து தேவனுக்குள் வளர்கிறோம். பவுல், சில நல்ல நோக்கத்தோடு, திருச்சபையை திருமணத்தோடு ஒப்பிடுகிறார் (எபேசியர் 5:21-33). திருமண உறவைப்போலவே, திருச்சபையும் பலதரப்பட்ட வித்தியாசமான மனிதர்களைக் கொண்டு, அவர்களுக்குள் மனத்தாழ்மையும் நீடிய பொறுமையும் உண்டாகும்பொருட்டு, “அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (4:2) இருக்கும்படிக்கு கூறுகிறார். திருமண உறவைப்போலவே, திருச்சபையிலும் வித்தியாசமான நம்பிக்கைகளை உடையவர்கள், ஒருமன ஆவியோடு செயல்படுகிறார்கள் (வச. 11-13). உறவில் விரிசல் ஏற்படுவது திருச்சபைக்கும் திருமணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதை மேற்கொண்டு, கிறிஸ்துவைப்போல மாற முடியும்.