இந்தியாவிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய தீர்மானம்
Kanimoli
2 years ago
இலங்கையில் முட்டையின் விலை மூன்று மடங்காகி 62 ரூபாவாகவும் இறைச்சி விலையும் கிலோ 550 இலிருந்து 1800 ஆகவும் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுகர்வோர் அதிகாரசபைக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களுக்கு கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்வதற்கான நிதி வசதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்