அமைச்சர் மகளின் பெறுமதியான இரத்தினக்கல் மோதிரத்தை திருடிய நபர் கைது

Kanimoli
2 years ago
  அமைச்சர் மகளின் பெறுமதியான இரத்தினக்கல்  மோதிரத்தை திருடிய நபர் கைது

  அமைச்சர் ஒருவரது மகளின் சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கல் பதித்த மோதிரத்தை திருடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமைச்சரின் மகள், தனது கணவர் மற்றும் சிலருடன் சுற்றுலா சென்றிருந்த வேளை அப்பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டலின் குளியலறையில் தன் மோதிரத்தைக் கழற்றி அறையின் சுவரில் அமைச்சரின் மகள் வைத்துள்ளார். ஹோட்டலுக்குள் பாம்பு வந்துவிட்டது என்று கூச்சலிட்டு குளியலறையில் இருந்து ஒருவர் ஓடிவந்த நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது மோதிரம் காணாமல் போயிருந்தது.

இதனையடுத்து ஹோட்டலின் கமெரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அதை யாரோ திருடிச் சென்றமை தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் கைதான குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் ஒரு மேசன் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!