நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்தாதிருக்க ரணில் அரசு தீர்மானம்

Kanimoli
2 years ago
நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்தாதிருக்க  ரணில்  அரசு தீர்மானம்

9 ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர், பொதுத்தேர்தலை நடத்தாதிருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது என்று நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஆளுங்கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே ஜனாதிபதியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“தற்போதைய நாடாளுமன்றம் மக்கள் ஆணையை இழந்துவிட்டது. எனவே, நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்” – என்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சியினரும், சிவில் அமைப்பினரும், போராட்டக்காரர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே, பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் படுதோல்வி ஏற்படும் என்ற அச்சத்தில், நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடியும் வரை காத்திருக்க ‘மொட்டு’க் கட்சி, ஜனாதிபதி ஊடாக வியூகம் வகுத்துள்ளது.

இருப்பினும், இந்த ஆண்டுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், அடுத்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவது குறித்து ஜனாதிபதி உத்தேசித்து வருகின்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!