தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுக்கான தடையை நீக்குவதில் பிரச்சினை இல்லை: விமல் வீரவன்ச
Mayoorikka
2 years ago
தமிழ் டயஸ்போராவிற்கான தடை அநியாயமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதனை நீக்குவதில் பிரச்சினை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்களின் டொலர் முதலீட்டின் அடிப்படையில் தடையை நீக்கம் செய்யப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாம் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம். நெருக்கடியின் உண்மையான அழுத்தத்தை நாம் இன்னும் அனுபவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.