பாடசாலை ஒன்றில் பயின்று வரும் 14 வயது மாணவன் அதிபரினால் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளான்.

Kanimoli
2 years ago
 பாடசாலை ஒன்றில் பயின்று வரும்  14 வயது மாணவன் அதிபரினால் கொடூரமாக  தாக்கப்பட்டு காயமடைந்துள்ளான்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயின்று வரும் நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளான்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தான் சொன்ன பணியைச் செய்யவில்லை என்று தெரிவித்து அதிபர், மாணவனை கடுமையாகத் தாக்கினார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது.

இதேவேளை, பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் இந்தச் சம்பவம் தொடர்பில் அறிக்கையிட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!