இங்கிலாந்துப் பெண்ணின் மேன்முறையீட்டு மனு நீதிமன்றால் நிராகரிப்பு
இலங்கையிலிருந்து தன்னை நாடு கடத்த எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி இங்கிலாந்துப்பெண் விடுத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இலங்கையில் இருந்து இங்கிலாந்துப்பெண்ணை வெளியேற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிடுமாறு கோரி இங்கிலாந்துப் பிரஜையான ஸ்கொட்லாந்து யுவதி கெலின் பிரேஷர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில், குறித்த மனுவை இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் நடந்த விடயங்களை குறித்த இங்கிலாந்துப் பெண் சமூக வலைத்தளங்களில் நேரலையில் பதிவேற்றியமை தொடர்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள விசா அனுமதியை இரத்துச் செய்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இம் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.