துவிச்சக்கர வண்டிகளின் விற்பனை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக அதன் விலைகளும் சடுதியாக குறைந்துள்ளது
Kanimoli
2 years ago
துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளதாக துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிப்பாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார்.
துவிச்சக்கர வண்டிகளின் விற்பனை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக அதன் விலைகளும் சடுதியாக குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி அதிகமாக உள்ள காலங்களில் துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்து காணப்பட்டது.
இதனால் துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்ததுடன் அதற்கான தட்டுப்பாடுகளும் ஏற்பட்டன.
தற்போது எரிபொருட்கள் தடையின்றி கிடைப்பதனால், துவிச்சக்கர வண்டிகளின் கேள்வி குறைவடைந்துடன் அதன் விலைகளும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.