ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டிற்கு அனுப்புவதை ஊக்குவிக்க மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!

Mayoorikka
2 years ago
ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டிற்கு அனுப்புவதை ஊக்குவிக்க மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!

பணிகள் ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டிற்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்குடன் 2022 ஆகஸ் 12 அன்று அல்லது அதற்குப் பின்னர் கிடைக்கப்பெறுகின்ற பணிகள் ஏற்றுமதி கிடைப்பனவுகளை/ பெறுகைகளை மாற்றுவதற்கான கட்டாயத் தேவைப்பாட்டினை இலங்கை மத்திய வங்கி மீளப்பெற்றுள்ளது.

இலங்கைக்கு அவ்வாறு அனுப்பப்பட்ட தமது ஏற்றுமதிப் பெறுகைகளை பணிகள் ஏற்றுமதியாளர்கள் அனுமதிக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம். பணிகள் வழங்கும் திகதியிலிருந்து 180 நாட்களுக்குள் பணிகள் ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டிற்குப் பெற்றுக்கொள்வதற்கான கட்டாயத் தேவைப்பாடு மாற்றமின்றிக் காணப்படும்.

வங்கிகள் மூலம் அறிக்கையிடப்பட்ட தகவல்களின் பிரகாரம் 2022இன் முதல் ஆறு மாதகாலப்பகுதியில் மொத்தமாக ஐ.அ.டொலர் 1,533 மில்லியன் கொண்ட தொகை பணிகள் ஏற்றுமதிக் கிடைப்பனவுகளாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் ஐ.அ.டொலர் 406 மில்லியன் இலங்கை ரூபாய்களாக மாற்றப்பட்டுள்ளது.

ஐ.அ.டொலர் 324 மில்லியன் கொண்ட அதிகூடிய மாதாந்த பணி ஏற்றுமதிப் பெறுகைகள் 2022 மாச்சில் கிடைக்கப்பெற்றன. பணிகள் ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களின் போது ஏற்றுமதிப் பெறுகைகளை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

இக்கட்டான இக்காலகட்டத்தில் அனைத்து ஏற்றுமதிப் பெறுகைகளையும் நாட்டிற்குக் கொண்டு வருமாறு அனைத்து ஏற்றுமதியாளர்களும் ஊக்குவிக்கப்படுகின்ற அதேவேளை அத்தகைய பெறுகைகளை 180 நாட்களுக்குள் பெற்றுக்கொள்வதற்கான கட்டாயத் தேவைப்பாடு பற்றி எடுத்துக்காட்டப்படுகின்றது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள் தொடர்பில் இயைபுடைய தேவைப்பாடுகளுடனான இணங்குவித்தல் மீதான அதன் கண்காணிப்பினை மத்திய வங்கி தீவிரப்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!