வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக அவசரமாக செல்லவோருக்கு கடவுச்சீட்டை வழங்க விசேட கவுன்டர் அறிமுகம்

Kanimoli
3 years ago
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக அவசரமாக செல்லவோருக்கு  கடவுச்சீட்டை வழங்க விசேட கவுன்டர் அறிமுகம்

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக அவசரமாக செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22-08-2022) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதிக விண்ணப்பம் காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இதனால், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய கவுன்டர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4