வெளிநாட்டு தொழில் மோசடியில் ஈடுபடும் மாபியாக்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார

Kanimoli
3 years ago
வெளிநாட்டு தொழில் மோசடியில் ஈடுபடும் மாபியாக்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார

வருகை விசாக்களை (Visit Visa) பயன்படுத்தி வெளிநாட்டு தொழில் மோசடியில் ஈடுபடும் மாபியாக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வருகை விசாக்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வேலைக்காக அனுப்பும் மாஃபியா ஒன்று ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆள் கடத்தலில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

விமான நிலையம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் இவ்வாறான மோசடிகளை கண்காணித்து வருவதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.

விமான நிலைய சேவைகள், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்படாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு மாஃபியாவை நடத்துவதாகக் கூறிய அவர், பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மூலம் வேலை தேடுவதற்காக விசிட் விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அவர் நாட்டு இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4