மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியே இல்லை -மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தகவல்

Kanimoli
2 years ago
மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியே இல்லை -மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தகவல்

மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியே இல்லை  என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுகேகொடவில் இன்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் ஜனநாயகத்தை இல்லாதொழித்து மக்களின் அமைதி போராட்டங்களை தீண்டும் வகையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயல்படுவாராயின் அவருக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுக்கும். 

இலங்கை வாழ் மக்களை ஒடுக்குவதன் மூலமும் வன்முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவதன் மூலமும் விக்ரமசிங்கவுக்கு அவரது பதவியை பாதுகாக்க முடியாது.

இலங்கையில் போராட்டங்களை முன்னெடுத்தவர்களையும் போராட்டத்தில் கலந்து கொண்டோரையும் ஜனாதிபதி தீவிரவாதியாக கருதுகிறார்.

ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்தவர்களையும் அவரது மாளிகைக்குள் சென்றவர்களையுமே அவர் இவ்வாறு கருதுகிறார்.

நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகியவர் மக்களுக்கு எதிராக ஒருபோதும் செயல்பட முடியாது. அவருக்கு அந்த உரிமை இல்லை. மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியே இல்லை.

செய்யப்பட்டவர் இன்று ராஜபக்ச குடும்பத்தினரை எதிர்த்தவர்களை தாக்குகிறார். இலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் கேட்டபோதிலும் இன்றுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக மக்களை ஒடுக்கும் செயல்பாடுகளே நடைபெறுகின்றன

மக்கள் எதிர்பார்க்கும் அரசாங்கமும் இன்று ஆட்சியில் இருக்கும் அரசாங்கமும் இரு வேறு விதமானவை.

இவ்வாறான சூழ்நிலையை எம்மால் மாத்திரமே மாற்ற முடியும். இலங்கையின் அரசியலில் ஊழல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும்.

மக்கள் எதிர்பார்க்கும் மக்கள் ஆணையிலான அரசாங்கம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.