அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் 20.08.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் 20.08.2022

மேஷம்
அசுவினி: குடும்பத்தினரின் விருப்பத்தை திறைவேற்றுவீர்கள். பொன் பொருள் வரவு உண்டாகும்.
பரணி: புதிய நட்புகளால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். மகிழ்ச்சியான நாள்.
கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி இழுபறியாகும். திடீர் வரவால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: செயலில் தடுமாற்றம் உண்டாகும். தேவையான சமயத்தில் குடும்பத்தினர் ஒத்துழைப்பர்.
ரோகிணி: தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்வீர்கள். எதிரிகள் விலகுவர்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்பாராத தடைகளால் செயலில் இழுபறி உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: செலவுகள் அதிகரித்தாலும் மறுபக்கம் உங்கள் தேவைகள் நிறைவேறி மகிழ்ச்சி அடைவீர்கள்.
திருவாதிரை: புதிய முயற்சி வேண்டாம். திடீர் செலவை சந்திக்க வேண்டிவரும் என்பதால் கவனம் தேவை.
புனர்பூசம் 1, 2, 3: மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும். எதிர்பாலினரால் ஆதாயம் அடைவீர்கள்.

கடகம்
புனர்பூசம் 1, 2, 3: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும்.
பூசம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகளின் ஆதரவால் ஒரு முயற்சி நிறைவேறும்.
ஆயில்யம்: தொழிலில் இருந்த தடைகளை சரிசெய்வீர்கள். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம்
மகம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.
பூரம்: எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நிறைவேறும்.
உத்திரம் 1: முயற்சியில் ஆதாயம் ஏற்படும். பிரபலங்களின் ஆதரவால் முக்கிய வேலைகளை முடிப்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் குழப்பம் தோன்றி உங்களை சங்கடப்படுத்தும்.
அஸ்தம்: நீங்கள் ஈடுபடும் வேலையில் தடைகள் உண்டானாலும் இறுதியில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
சித்திரை 1, 2: செயல்களில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள். பெரியவர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும்.

துலாம்
சித்திரை 3, 4: சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடம் அடைவீர்கள். தீயவரை விட்டு விலகுவது நல்லது.
சுவாதி: யோசிக்காமல் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். உங்களுடைய முயற்சிகள் இன்று இழுபறியாகும்.
விசாகம் 1, 2, 3: எதிர்பாராத பிரச்னைகள் தேடி வரும். வருமானத்திலும் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.

விருச்சிகம்
விசாகம் 4: எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு வரும். பொன் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
அனுஷம்: குடும்பத்தில் செல்வாக்கு உயரும். யாருடைய உதவியும் இன்றி நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
கேட்டை: முயற்சிக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். கணவன். மனைவி உறவில் இருந்த பிரச்னைகள் விலகும்.

தனுசு
மூலம்: நீங்கள் நினைத்ததை துணிச்சலுடன் சாதிப்பீர்கள். செல்வாக்கு உயரும். யோகமான நாள்.
பூராடம்: எதிரிகள் விலகிச் செல்வர். திட்டமிட்டு செயல்பட்டு உங்களுடைய முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
உத்திராடம் 1: உற்சாகம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு செய்தி உங்களை வந்து சேரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: உழைப்பு அதிகரிக்கும். முயற்சியில் பின்னடைவு ஏற்படும். பிள்ளைகளால் சங்கடம் வரலாம்.
திருவோணம்: சொத்துகளில் இருந்த பிரச்னைகள் மீண்டும் தலை எடுக்கும். உறவினரால் சங்கடம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: அலைச்சல் அதிகரிக்கும். செலவு செய்தும் நினைத்ததை சாதிக்க முடியாமல் சோர்வடைவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: தாய்வழி உறவினர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
சதயம்: கடும்முயற்சிக்குப்பின் உங்களின் எண்ணம் நிறைவேறும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
பூரட்டாதி 1, 2, 3: தொழில் ரீதியாக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரியவர்கள் ஆதரவுடன் இருப்பர்.

மீனம்
பூரட்டாதி 4: நீண்டநாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். ஈடுபடும் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.
உத்திரட்டாதி: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும்.
ரேவதி: உங்கள் ஆற்றல் வெளிப்படும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். யோகமான நாள்.