இந்த நெருக்கடிக்கு நானும் முந்தைய அரசாங்கம் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டும் - முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச

Reha
2 years ago
இந்த நெருக்கடிக்கு நானும் முந்தைய அரசாங்கம் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டும் - முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரம் நாட்டின் இந்த நிலைமைக்கு பொறுப்பல்ல, நானும் முந்தைய அரசாங்கம் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டுமென முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ செய்ய வேண்டியதை முடித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. நாட்டை விட்டு செல்வதற்கு முன் கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் ஆலோசித்திருக்கவில்லை. அவர் சென்றிருக்கக் கூடாது.

எனினும், அவர் முடிவு செய்துவிட்டே, ‘நான் போகிறேன்’ என என்னிடம் கூறினார். நான் அதற்கு பதிலளிக்கும் வகையில் எதுவும் சொல்லவில்லை என மஹிந்த கூறியுள்ளார்.

” கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகத்தின் கீழ் மே மாதம் வரை  நான் பிரதமராக இருந்தேன். "போகலாமா என்று அவர் என்னிடம் கேட்டிருந்தால், நான் வேண்டாம் என்று சொல்லியிருப்பேன்.

நாட்டின் அனைத்து நெருக்கடிகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பல்ல. இதற்கு நான் மற்றும் முந்தைய அரசாங்கங்கள் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டும்.

துரதிஷ்டவசமாக, அவர் (கோட்டாபய) தான் நம்பிய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டார். எனவே, அவரைக் குறை கூற முடியாது. (இதில் மத்திய வங்கியின் முந்தைய ஆளுநர்கள் குறிப்பிடப்படுகின்றனர்).

அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது சிறந்த நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தினார். ஜனாதிபதியாக அவர் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார்.

முன்பெல்லாம் அவர் ஒரு கடும்போக்குவாதியாக இருந்தார். ஜனாதிபதியானவுடன் அவர் மென்மையாக மாறினார். அவர் செய்ததை தொடரும செய்திருக்கக்கூடாது, ஆனால் அவர் அரசியல்வாதி அல்ல.

எவ்வாறாயினும், அவர் முன் இருந்த பணியை சரியாக முடித்திருக்க வேண்டும் என்றார்.

"விரைவான பொருளாதார மீட்சியைக் கொண்டு வரக்கூடிய ஒரேயொரு திறமையான நபர் ரணில் மட்டுமே. அதனால்தான் நான் அவர் பதவி ஏற்றதை ஆமோதித்து அவருக்கு எனது ஆதரவை தெரிவித்தேன்" என்றார்.