அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைந்து சொத்துக்களை அபகரித்த தேரர் ஒருவர் உட்பட 08 பேர் கைது

Mayoorikka
2 years ago
அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைந்து சொத்துக்களை அபகரித்த தேரர் ஒருவர் உட்பட 08 பேர் கைது

அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைந்து சொத்துக்களை அபகரித்தமை மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவங்கள் தொடர்பில் தேரர் ஒருவர் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய வழக்குகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த தேரர் உட்பட மூவர் கொழும்பு துறைமுக நகர பகுதியிலும் பொத்துஹெர மற்றும் நுகேகொட பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுல் கொழும்பு துறைமுக நகர் வேலைத்தளத்தில் பணிபுரியும் 26 வயதுடைய ஊழியர் ஒருவர் மற்றும் 24 வயதான பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் தேரர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொதடுவ பிரதேசத்தில் வைத்து 53 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெலிக்கடை பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் அலரி மாளிகையில் சொத்துக்களை திருடிய 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இருந்து 07 பித்தளை ஆபரணங்களும், பெரிய அளவிலான பயணப் பையும் திருடப்பட்ட நிலையில் சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.