இன்றைய வேத வசனம் 27.08.2022: தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.
இயேசு எருசலேம் தேவாலயத்திற்கு சென்ற போது, அங்கே வியாபாரம் பண்ணுகிறவர்களை பார்த்து கோபமடைந்து அவர்களை விரடியடித்தார்.
என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு! என ஏசாயா தீர்கதரிசியினால் சொல்லப்பட்ட வார்த்தையை நினைவு கூர்ந்து தேவாலயத்தை சுத்திகரித்தார்.
இந்த சம்பவம் மத்தேயு 21:12,13 மற்றும் மாற்கு 11:15-17 ஆகிய பகுதிகளில் கூறப்பட்டுள்ளது.
தேவாலயத்தை இயேசு சத்திகரித்தது அவர் ஆலயத்தின் மீது வைத்துள்ள ஒரு பரிசுத்த பக்தி வைராக்கியத்தைக் காட்டுகிறது.
நண்பர்களே, தேவாலயத்தை சத்திகரித்த இயேசு உங்கள் சரீரமாகிய ஆலயத்தையும் நீங்கள் சுத்திகரிக்க வேண்டுமென்று விரும்புகிறார்.
கொரிந்தியர் 3:17
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.
இன்றே உங்கள் வாழ்க்கையை இயேசு விரும்புகிறபடி சுத்திகரிக்க முயற்சியுங்கள். ஆமென்...