விற்பனை செய்யப்படாத நிலையில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக்கல்!

Mayoorikka
3 years ago
விற்பனை செய்யப்படாத நிலையில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக்கல்!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக்கல் 6 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்தார்.

இந்த மாணிக்கத்தின் பெறுமதி 2,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் தெரிவித்தார்.

530 கிலோ எடையுள்ள இந்த மாணிக்கக்கல் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது பெற வேண்டிய 25% வைப்புத் தொகையின்றி எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இரத்தினத்தை ஆய்வுக்கு எடுத்துச் செல்ல தேவையான ஆயிரம் ரூபா மட்டுமே அதிகாரியிடம் செலுத்தப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4