ASIA CUP - ஆப்கானிஸ்தான் உடனான முதலாவது போட்டியில் இலங்கை அபார தோல்வி
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (27) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகியது.
தொடரின் முதல் போட்டியாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் பானுக ராஜபஷ 38 ஓட்டங்களையும் சாமிக கருணாரத்ன 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் Fazalhaq Farooqi 3 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தார்.
அதனடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 106 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் Rahmanullah Gurbaz 40 ஓட்டங்களையும் Hazratullah Zazai 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.