நாட்டில் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 2 மணி வரை நீர்வெட்டு அமுல்

Prasu
3 years ago
நாட்டில் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 2 மணி வரை நீர்வெட்டு அமுல்

நாட்டில் சில பகுதிகளில்  நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டை, கடுவெல மாநகர சபை பகுதி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபை பகுதி, கொட்டிகாவத்தை முல்லேரிய பிரதேச சபை பகுதி, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் 18 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4