27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்திலிருந்து விடை பெறும் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்துள்ளார். இவர் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்றுள்ளார்.
மேலும் இவர் தனது கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா வீராங்கனையான அஜ்லா டோமலஜனோவிக் என்பவருடன் மோதினார். அதில் தோல்வியடைந்த அஜ்லா டோமலஜனோவிக் தனக்கு ஆதரவளித்த பெற்றோர் மற்றும் சகோதரிக்கு நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து தனது பயணத்தை நிறைவு செய்த செரீனா வில்லியம்ஸ்க்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “செரீனா வில்லியம்ஸ் உங்களது சிறப்பான கேரியருக்கு வாழ்த்துக்கள்!
காம்ப்டடுனை சேர்ந்த ஒரு இளம் பெண் எல்லா காலத்திலும் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக வளர்ந்து வருவதை பார்க்க முடிந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.
மேலும் என் தோழியான உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்கள் திறமையை நீங்கள் எப்படி மாற்றியமைக்க போகிறீர்கள் என்பதை காண என்னால் காத்திருக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.