பிடிகல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு: 31 வயதுடைய நபர் பலி

Prathees
3 years ago
பிடிகல பிரதேசத்தில்  துப்பாக்கிச் சூடு: 31 வயதுடைய நபர்  பலி

பிடிகல, தல்கஸ்வல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​வீட்டுக்கு அருகில் மறைந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வட்டிக்குப் பணம் கொடுத்தவர் எனவும் பணத் தகராறே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4