டொலர் பற்றாக்குறையால் 8 நாட்களுக்கு மேலாக மசகு எண்ணெய்யுடன் இலங்கை கடற்பரப்பில் காத்துக்கிடக்கும் கப்பல்

Kanimoli
2 years ago
டொலர் பற்றாக்குறையால் 8 நாட்களுக்கு மேலாக மசகு எண்ணெய்யுடன் இலங்கை கடற்பரப்பில் காத்துக்கிடக்கும் கப்பல்

டொலர் பிரச்சினை காரணமாக நாட்டின் கடற்பரப்பில் எட்டு நாட்களாக மசகு எண்ணெய் கப்பலொன்று காத்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மசகு எண்ணெய்யுடன் இலங்கை கடற்பரப்பில் கப்பல்
இந்த கப்பலில் சுமார் ஒரு இலட்சம் தொன் எடையுடைய மசகு எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி இந்த கப்பல் இலங்கை கடற்பரப்பினை வந்தடைந்துள்ளது.

டொலர்கள் இல்லாத காரணத்தினால் நாள் ஒன்றுக்கு தாமதக் கட்டணமாக 75000 டொலர்களை செலுத்த நேரிட்டுள்ளதாக பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த மசகு எண்ணெய் செறிவு கூடியது எனவும், இதனை பயன்படுத்துவதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் இயந்திர சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ள எரிபொருள் விநியோகம்
இந்த நிலையில் எரிபொருள் விநியோகத்தை மேலும் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய களஞ்சியசாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.