கர்ப்பிணிகள், சிறுவர்கள் மிகவும் அவதானத்துக்குரிய இடத்திலேயே உள்ளனர்;: வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே

Mayoorikka
2 years ago
கர்ப்பிணிகள், சிறுவர்கள் மிகவும் அவதானத்துக்குரிய இடத்திலேயே உள்ளனர்;: வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே

கர்ப்பிணிகள், சிறுவர்கள் மிகவும் அவதானத்துக்குரிய இடத்திலேயே தற்போது உள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டேபுள்ளே தெரிவித்துள்ளார்.

பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்த போஷனை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று மிகவும் முக்கியமான விடயத்தை எதிர்க் கட்சியானது பாராளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைத்துள்ளது.

சிறுவர்களின் போசணை மட்ட விடயத்தில் மிகவும் முக்கியமான ஓர் இடத்தில் நாம் இருக்கின்றோம்.

கர்ப்பிணிகள், சிறுவர்கள் மிகவும் அவதானத்துக்குரிய இடத்திலேயே தற்போது இருக்கின்றனர்.

கடந்த அரசாங்கங்கள் அனைத்தும் சிறுவர்களின் போசணை மட்டத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

அதன் காரணமாகவே கடந்த காலங்களில் சிறுவர் மந்த போசணை மட்டம் குறைவடைந்து சென்றது.

2020ஆம் ஆண்டுவரை மந்தபோசணை மட்டத்தை குறைப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட சுகாதாரத்துறை, யுனிசெப் நிறுவனம் உள்ளிட்ட சகலருக்கும் நான் இந்த வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாட்டில் தற்போது பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு நாடு முங்கொடுத்துள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கு மாற்றுத்திட்டங்களை முன்னெடுக்காததன் காரணமாக இன்று நாடு பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.

உணவு பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

விவசாயத் துறை தொடர்பில் எடுத்த தவறான தீர்மானம் காரணமாக நாட்டின் உற்பத்தி குறைவடைந்துள்ளது.

உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு, பணவீக்கம் என்பவற்றால் நாட்டு மக்கள் இன்று பாரிய உணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர்.

பலர் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர்.

வாழ்க்கை செலவீனம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே இன்று பாரிய உணவு தட்டுப்பாட்டை நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.