இன்றைய வேத வசனம் 11.09.2022: உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்;

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 11.09.2022: உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்;

ஒரு முறை வாலிபன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் கொடுத்துவந்தனர்.

அப்படியிருந்தும் சரீரத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை வலி வேதனைகள் தான்.

அவன் கடவுள் இல்லை என்ற நம்பிக்கையில் வளர்ந்தவன். ஒரு நாள் மாலைப்பொழுது மனச்சோர்வோடு யாராவது எனக்கு சுகம் தரமாட்டார்களா...? என்ற மனநிலையில் இருந்தான்.

அப்பொழுது இயேசுவை அறிவிப்பதற்க்காக கிறிஸ்தவ மிஷ்னெரிகள் மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்கள் அந்த வாலிபனிடம் இயேசு நமக்காக மரித்ததையும், அவர் நமக்காய் பட்ட வேதனைகளையும், அவர் சரீரம் கிழிக்கபட்டதையும், அவர் சிலுவையில் அறையப்பட்டதையும் அவனுக்கு போதித்தனர்.

அதனை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். பிறகு சொன்னான் "உண்மையிலேயே இந்த இயேசுவுக்கு தான் என்னுடைய சரீர வலி வேதனைகள் எல்லாம் தெரியும்." என்றுச் சொல்லிக்கொண்டு, முழங்காற்படியிட்டு அழுது தன்னுடைய சரீர வலி வேதனைகள் பற்றி இயேசு கிறிஸ்துவிடம் கூறினான்.

தேவன் அவனுக்கு அற்புத சுகத்தை கட்டளையிட்டார். நிம்மதியாக மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.

எல்லாரிடத்திலும் அவன் பெற்ற சுகத்தை கூறி இயேசுவை அறிவிக்கிற ஊழியக்காரனாய் மாறி விட்டான்.

ஆம் நண்பர்களே, இயேசுவுக்கு வலி என்றால் என்ன, வேதனை என்றால் என்ன என்று தெரியும்.

எனென்றால் அவர் எல்லாவற்றையும் இந்த உலகத்தில் அனுபவத்திருக்கிறார்.

இயேசுவை வாரினால் அடித்தார்கள், துப்பினார்கள், விலாவில் குத்தினார்கள், சிலுவையில் கை காலில் ஆணிகள் அடித்தார்கள், தலையில் முள்கீரீடம் வைத்தார்கள்.

அவர் மாத்திரமே நம் பாடுகளை வேதனைகளை உணர்ந்துக்கொள்ள முடியும்.

ஆகவே, உங்கள் பெலவீனங்கள், வியாதிகள், வேதனைகள், வலிகள் எல்லாவற்றையும் இயேசுவின் முன் நிறுத்துங்கள். அவர் எல்லாவற்றையும் மாற்றி உங்களுக்கு சுகம் கொடுக்க வல்லவராய் இருக்கிறார். ஆமென்!!

உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; (இராஜாக்கள் 20:5)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!