இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுக்க யாழ்.மாநகர முதல்வர் ஜெனீவா சென்றடைந்தார்!
Mayoorikka
2 years ago

ஐ.நா. சபையின் 52 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று ஆரம்பமாக உள்ளது.
இதனை முன்னிட்டு இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையின் முன் அமைந்துள்ள முருகதாசன் திடலில் இன்று பிற்பகல் 2 மணியளவில் ஒன்று கூடல் ஒன்றும் இடம்பெற உள்ளது.
இவற்றில் கலந்து கொள்வதற்காக யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று ஜெனீவா சென்றடைந்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஒன்றுகூடலில் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் நீதிக்கான குரலுக்கு வலுச் சேர்க்குமாறு அன்போடும், உரிமையுடனும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என யாழ்.மாநகர முதல்வர் ஜெனீவாவிலிருந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.



