மகசின் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களுக்கு ஆதரவு – யாழில் உறவினர்கள் உணவு தவிர்ப்பு!

Mayoorikka
3 years ago
மகசின் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களுக்கு ஆதரவு – யாழில் உறவினர்கள் உணவு தவிர்ப்பு!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று(12) காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
 
கடந்த 2019இ2020 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செப்டம்பர் 06ம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில்இ அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களினுடைய உறவினர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.
 
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளை விடுதலை செய், சிறுபிள்ளைகளின் எதிர்காலத்தை சிறையில் சிதைத்து விடாதே, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்களடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4