18வது வளைவில் ஆயுதங்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து
Prathees
2 years ago

கண்டி மஹியங்கனை வீதியில் 18ஆவது வளைவின் 11ஆவது வளைவுக்கு அருகில் T56 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை ஏற்றிச் சென்ற பொலிஸ் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பொலிஸ் பயிலுனர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் போது வாகனத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்துள்ளனர்.



