சகோதரனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மயங்கி விழுந்து உயிரிழப்பு

Kanimoli
2 years ago
சகோதரனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மயங்கி விழுந்து உயிரிழப்பு

  இலங்கையில் தனது சகோதரனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 42 வயதுடைய அசேல சுரங்க சில்வா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்று முன் தினம் நெஞ்சுவலியால் திடீரென மரணமடைந்தார்.

இந்நிலையில் மறுநாள் அவரது இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளத் தயாராகும் வேளையில் அவரது இளைய சகோதரி அகம்பொடி ரங்கி துலாஞ்சனி 31 வயதான சில்வாவும் சடலத்திற்கு அருகில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவர்களின் மரணத்தின் பின்னர், அசேல சுரங்கவின் மகள், மகன், மைத்துனர் மற்றும் அத்தை ஆகியோர் அதிர்ச்சி காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!