அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் சஜித்தை சந்தித்து கலந்துரையாடல்

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் உள்ளிட்ட பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டனர்.
இச் சந்திப்பானது இன்று (12) மாலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
1889 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம், ஒரு சமூகத்தில் ஜனநாயக ஆட்சி,மக்கள் பிரதிநிதித்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சமூக குடிமை சார் அபிலாஷைகளை மேம்படுத்தும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 652 என்ற விமானத்தில் அவர் நாட்டை வந்தடைந்தார்.
அவர் இன்றைய தினம் அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.



