யாழில் ஹெரோயின் மற்றும்பெறுமதியான தங்க நகைகளுடனும் 24 வயதுடைய இளைஞன் கைது

Kanimoli
3 years ago
யாழில் ஹெரோயின் மற்றும்பெறுமதியான தங்க நகைகளுடனும்  24 வயதுடைய இளைஞன்  கைது

யாழ், கச்சேரி பகுதியில் வைத்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடனும் போதை பொருளுடனும் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். தலைமை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலையிலான பொலிஸ் குழுவினர், சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் கச்சேரி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது வியாபாரத்துக்காக ஹரோயின் போதைபொருளை எடுத்துக் கொண்டு வீதியில் நடந்து சென்ற இளைஞனை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 8 அரை கிராம் ஹெரோயின் போதை பொருள் மற்றும் 20 இலட்சம் ரூபா கொண்ட தங்க ஆபரணங்களான 6 காப்புக்கள் 4 சங்கிலிகள், தோடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் இவர் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவரை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4