இன்றைய வேத வசனம் 14.09.2022: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 14.09.2022: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது

தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது - மத்தேயு 12:25

ஜூன் 16, 1858 அன்று, அமெரிக்காவின் மேல் சட்டசபைக்கு, குடியரசு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான, ஆபிரகாம் லிங்கன், “பிரிக்கப்பட்ட வீடு” என்ற தலைப்பில் பிரசித்திபெற்ற ஒரு உரையை நிகழ்த்தினார்.

அதில், அமெரிக்காவிலுள்ள, அடிமைத்தனத்தின் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினார். அப்பொழுது லிங்கனின் நண்பர்கள், எதிரிகள் என எல்லாரிடமிருந்தும் இப்பேச்சு ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது.

மத்தேயு 12:25 ல் சொல்லப்பட்டுள்ள “பிரிக்கப்பட்ட வீடு” என்ற தலைப்பில் அவர் பேசியதற்கான காரணம், இவ்வுவமை எல்லாருக்கும் அறிமுகமானதொன்றாக இருந்தாலும், அதிகமாக வலியுறுத்தப்படவில்லை என்பதேயாகும்.

பிரிக்கப்பட்ட வீடு நிலைநிற்காது, இணைந்திருக்கும் வீடு நிலை நிற்கும். அடிப்படையில் தேவனின் வீடும் அப்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது (எபேசியர் 2:19). பலவகையான பின்னணிகளையுடைய மக்களாய் நாம் இருந்தாலும், இயேசுவின் சிலுவை மரணத்தால் நாம் தேவனோடும் மற்றவர்களோடும் ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறோம் (வ.14–16). இந்த சத்தியத்தைக் கருத்தில்கொண்டு (எபேசியர் 3 ஐ பார்க்கவும்) விசுவாசிகளுக்கு, “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். (4:3) என பவுல் அறிவுறுத்துகிறார்.

இன்றைக்கும் விசுவாசக் குடும்பத்தினரை, நெறுக்கும் காரியங்கள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஆவியானவரின் துணையோடு நாம் ஒருவருக்கொருவர் ஒற்றுமையைக் காத்துக்கொள்ள, தேவன் நமக்குத் தேவையான பெலத்தையும் ஞானத்தையும் அருள்வாராக. இப்படிச் செய்வதால், பிரிந்து இருண்டுபோன இவ்வுலகிற்கு நாம் வெளிச்சமாவோம்.

குடும்பங்களில் "சமாதானக் காரணராக" தேவன் எவ்வாறு உங்களைப் பயன்படுத்தமுடியும்? அமைதியின்மை மற்றும் பிளவுகளை எதிர்கொள்ள வேதத்தின் எந்தப் பகுதி உங்களுக்கு உதவுகிறது?

இயேசுவே, அனைவரிடமும் நான் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கான ஞானம், தைரியம் மற்றும் பெலனை நீர் எனக்குத் தாரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!