இன்றைய வேத வசனம் 15.09.2022: சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 15.09.2022: சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில்

பிசாசு பெண்களை ஏமாற்றும் வழிகளில் ஒன்று தான் தந்திரம்.

நாம் சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களாயிருக்க வேண்டுமென வேதம் அறிவுறுத்துகிறது.

நம் ஆவிக்குரிய பயணத்தில் நம் வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்கள் மூலமாக பிசாசு வெவ்வேறு வடிவங்களை எடுக்கிறான்.

சத்துருவை நாம் ஜெயிக்க வேண்டுமென்றால் முதலாவது அவனது தந்திரங்களை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அநேக வேளையில் நாம் மனிதர்கள் மேல் வைக்கும் கபடற்ற நம்பிக்கையே நமது வீழ்ச்சிக்கு காரணமாகிறது.

இப்படி நம்பிக்கைக்குரிய மனிதர்களே நம்மிடம் எல்லை மீறுகிறார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்களை வேதம் துன்மார்க்கர் என்று சொல்கிறது.

இப்படிப்பட்ட நிகழ்வுகளை நாம் தினந்தோறும் செய்திகளில் வாசிக்கிறோம். இப்படிப்பட்ட நபர்கள் நம்மிடையே நம்முடைய உறவினராக கூட இருக்கலாம்.

அம்மோன், தாவீது மற்றும் சீகேமைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். தாவீது இப்பட்டியலில் இருப்பதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம்! அவனும் மனிதனே!!

எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். (2 தீமோ 3:7)

இந்த உணணர்வில்லாத பெண்பிள்ளைகளாய் நீங்கள் இருக்கக் கூடாது. நிங்கள் கவனமாயிராவிடில் ஏற்ப்படும் விளைவு பெரியது என்பதை புரிந்து செயல்படுங்கள். தேவகிருபை உங்களோடிருப்பதாக.. ஆமென்!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!