பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் நீக்கப்படுவாரா..? பசிலிடமிருந்து ஜனாதிபதிக்கு ஒரு செய்தி..

Prathees
3 years ago
பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் நீக்கப்படுவாரா..? பசிலிடமிருந்து ஜனாதிபதிக்கு ஒரு செய்தி..

பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும், அதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவை கோரியுள்ளதாகவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பிரதமர் தினேஷ் குணவர்தனவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இது தொடர்பில் அறிவிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அதன்படி பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து அந்த தகவலை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4