இன்றைய வேத வசனம் 20.09.2022: நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால்
நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை - எண்ணாகமம் 20:12
ஒரு கல்லூரியின் கால்பந்து ஆட்டத்திற்குப் பின், அந்த வாலிபன் தன் நண்பனை மோட்டார் சைக்கிளில் வேகமாகத் தொடர்ந்தான். பலமாய் மழை பெய்ததால் தன் நண்பனுக்குச் சமமாய் ஓட்டுவது கடினமாயிருந்தது.
திடீரென தனக்குமுன் வந்த சிக்னல் கம்பத்தைப் பார்த்தவன் வேகமாக பிரேக்கை அழுத்தவே, சாலையிலிருந்து சறுக்கிய வண்டி, அருகேயிருந்த பெரிய மரத்தில் மோதியது.
வண்டி உருக்குலைந்து, அவன் கண் விழிக்கையில் அருகிலிருந்த மருத்துவமனையின் கோமா பிரிவில் இருந்தான். தேவனின் கிருபையால் அவன் உயிரோடிருந்தாலும், அவனுடைய பொறுப்பற்ற முறை பலத்த சேதத்தை உண்டாக்கிவிட்டது.
தனக்கே பெரிய விளைவுகளை உண்டாக்கும் பொறுப்பற்ற தீர்மானத்தை மோசே எடுத்தார். தண்ணீர் பற்றாக்குறை உண்டானபோது, அவர் மதியீனமான முடிவொன்றை எடுத்தார் (என்னைப் பொறுத்தமட்டில் இது பெரிய காரியமில்லை). சீன் வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களுக்கு தண்ணீரில்லை, “அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள்.” (எண்ணாகமம் 20:2). திகைத்துப்போன தலைவரை நோக்கி, ஒரு கன்மலையிடம் பேசுமாறு தேவன் சொன்னார் “அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்” (வ.8). ஆனால் மாறாக அவன் , “கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்” (வ.11). அதற்கு தேவன், “நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்” (வ.12).
நாம் பொறுப்பற்ற முடிவுகளை எடுக்கையில் அதின் விளைவுகளை நாமே அனுபவிப்போம். “ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.” (நீதிமொழிகள் 19:2). நாம் ஜெபத்தோடும், கவனத்தோடும் தேவனின் ஞானத்தையும், வழிகாட்டுதலையும் இன்று நமது அனைத்து முடிவுகளிலும் தீர்மானங்களிலும் தேடுவோமாக.