இன்றைய வேத வசனம் 21.09.2022: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்
ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன் - யோவான் 7:37
நீலகிரியிலிருந்து கொய் மலர்கள் எனக்குக் கிடைத்தன. நீண்ட சாலைப்பயணத்தில் அவை கசங்கியும், வதங்கியும் இருந்தன. குளிர்ந்த நன்னீரால் அவை புத்துணர்வு பெறுமென அதிலிருந்த குறிப்பில் சொல்லப்பட்டிருந்தது.
அதற்குமுன் அதின் காம்புகளைக் கத்தரிக்க, நீரை உரியச் சுலபமாயிருக்குமாம். அப்படிச் செய்வது அவைகளுக்குத் தீங்கில்லையா? என்ற கேள்வி எனக்குள் பிறந்தது.
மறுநாள் காலை என் கேள்விக்குப் பதில் கிடைத்தது. நீலகிரியிலிருந்து வந்த அந்த பூச்செண்டு பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது, இதுவரை நான் கண்டிராத கொள்ளை அழகு மலர்களாய் இருந்தன.
இதெல்லாம் நன்னீர் செய்த மாயம். இயேசு தண்ணீரைக் குறித்து சொன்னதும், விசுவாசிகளுக்கு அவை எவ்வளவு அவசியம் என்பதை எனக்கு நினைவூட்டியது.
அந்த சமாரியப் பெண்ணிடம் இயேசு குடிக்கத் தண்ணீர் கேட்டபோது, கிணற்றிலிருந்து தான் மொண்டதை குடிப்பார் என்றெண்ணினாள். அவரோ, அவள் வாழ்வையே மாற்றினார். அவர் அவளிடம் கேட்டதைக்குறித்து அவள் ஆச்சரியப்பட்டாள்.
யூதர்கள் சமாரியர்களை அற்பமாகவே எண்ணினர். ஆனால் இயேசுவோ, “நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார் (யோவான் 4:10). பின்னர், தேவாலயத்தில் அவர், “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.” (7:37) என்று சத்தமிட்டுக் கூறினார்.
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, மோசே உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். (வ.38–39).
வாழ்க்கைப் பயணத்தில் களைத்துப்போன நமக்கும் தேவ ஆவியானவரால் புத்துணர்வு தரமுடியும். அவரே ஜீவத்தண்ணீராய் நமக்குள் வாசமாயிருந்து பரிசுத்தமாம் புத்துணர்வைத் தந்து அவருள் ஆழமாய் வளரச்செய்வாராக.